Tuesday, August 16, 2011

அரவாணி



இறைவன் எழுதிய கவிதையில் எழுத்துப்பிழை ..

கவிதை பிழையாக இருந்தாலும் அழகுதான் ...

Monday, August 8, 2011

போலாம் ரைட்


என் பிரியமானவர்களுக்கு

என் வாழ்வில் நான் லயித்து போன விசயங்களில் ஒன்று பேருந்து.அது என் பயணத்தின் போது காதலிக்க படவில்லை.அது நான் சிறுவயதில் ஆச்சரியத்தின் உரு வாக பாத்திருக்கிறேன் .அப்போது பதிந்து போனது என்னுள் அதன் பிம்பம்.ஜன்னலோரம் அமர்ந்து மரங்களை பின்னோக்கி தள்ளிவிட்டு காற்றை கிழித்துக்கொண்டு போகும்போது உண்டான உணர்வு என் உதிரத்தில் ஒட்டிகொண்டது..இதை நான் பதிவு செய்யலாம் என்று எடுத்த ஒரு முயற்சி....ஒரு சில வரிகள் .........நான் ஆக்கும் பானை சோறு பதமா என்று எனக்கு தெரியாது..ஒரு சில பருக்கைகளை உங்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன்..ருசித்து விட்டு சொல்லுகள்..உங்கள் முடிவு என் பதிவுக்கு ஆரம்பம்..... போலாம் ரைட்




ஏழைகளின் ஏரோப்ளேன் நீ!
நீ குடிப்பது டின் பால் இல்லை டீசல் பால் !

மழையில் நனைகிறாய்
வெயிலிலும் வேலை பார்க்கிறாய்
தாமதத்தின் காரணம் மனிதனாக இருந்தாலும்
சொல்லுவது பஸ் லேட்டு !

காதல் ,காமம்,இசை,தூக்கம்,
இதை எல்லாம் தரும் உன்னை
எப்படி எந்திரம் என்று சொல்ல !

Thursday, August 4, 2011

தமிழ் செம்மொழி ஆனது


உனக்கு பெயர் வைத்த பிறகுதான்
தமிழ் செம்மொழி ஆனது

Friday, July 22, 2011

தெரியாமலே போகட்டும்


வீதியெங்கும் விழாகோலம்
சாலையெங்கும் வர்ணஜாலம்

காது ஜவ்வு கிழிந்து போகும்
குழாய் ரேடியோ குரைத்துகொண்டு இருந்தது

சூரிய வெப்பத்தை பொருட்படுத்தாமல்
பம்பரமாய் சுழன்று
இலைகளை நறுக்கிக்கொண்டு இருந்தார்கள்
கிடா விருந்துக்கு ..........

தலைதெறிக்க ஓடி வேலை
செய்வது
தன் தலைவனின் பிறந்தநாளுக்காக
சுப்ரமணிய சிவா
நீ மீண்டும் அவதரித்தால் விழா எடுத்து
உன்னையும் வீணாக்கி விடுவார்கள்
உன் பிறந்த நாள் இவர்களுக்கு தெரியாமலே போகட்டும்

Thursday, July 14, 2011

எங்களை மன்னியுங்கள் ஐயா


அனைவர்க்கும் கல்வி
கஷ்டப்பட்டார்
கருப்பு காந்தி

சமச்சீர் கல்வி
காலியாய்
கல்விக்கூடங்கள் .......
திரையரங்கில் மாணவர்கள் கூட்டம்

கல்வி வள்ளலுக்கு வாழ்த்து சொல்லும்
தகுதியை இழந்துவிட்டோம் .....

எங்களை மன்னியுங்கள் ஐயா ...........

Wednesday, July 6, 2011

நாட்டு நடப்பு

நான் உனக்கு முத்தம்
தந்தேன்
திரும்பி தாராமல் திருப்பி கொள்கிறாய்
சமச்சீர் கல்வியை எப்படி சரி செய்வது

நீ பேசுவதற்காகவே
தனி மொழி கேட்பேன்
எதுக்கு இன்னொரு தெலுங்கனா பிரச்சனை

கோவிலுக்குள் நீ !
பொதுமக்களுக்கு தாமதமாகத்தான் தெரிகிறது
தங்க புதையல் இருப்பது

இருளிலும் அழகாகத்தான் இருக்கிறாய்
இரண்டு மணி நேர பவர் கட்

நீ ஓவியம் பேசும்
கவிதை
கவிதைகள் செய்த
ஓவியம்

ஒரு இனத்தை அதன் இனத்தோடு
சேர்ப்பது தவறில்லை
பூக்களை பறித்தேன் அவளுக்காக
பூக்களை பறிக்கலாம் தவறில்லை

Sunday, July 3, 2011

சென்ரிங் சிநேகிதன்

கண்ணாமூச்சி விளையாடும் போதுதான்
உன்னை கண்டுபிடித்தேன்

பலமுறை யோசித்திருக்கிறேன்
மனிதன் மழையின் போது உனக்குமட்டும்
ஏன் குடை பிடிக்க மறந்துபோகிறான்

பழையசோறை வடகமாக்கும்
போதுதான் என் அம்மாவுக்கு
உன் மேல் பாசம் வரும்

விஸ்கியில் விழும் நேரம் மட்டும்
என் அப்பாவுக்கு உன் விலாசம் தெரியும்

எனக்கு நீ எப்படி
கண்டிப்பாக இப்படி அல்ல

உல்லாசபயணம் நிறைய சென்று இருக்கிறேன்
உன் மீது உறங்கும் போதுதான் வானத்தை
சுற்றிஇருக்கிறேன்
நிலவை காதலித்திருக்கிறேன்
நட்சத்திரங்களோடு நட்பாகி இருக்கிறேன்

எதோ பிரச்சனையை சுமந்து உன் மேல் உறங்குவேன்
மதியவெயிலில் நீ வாங்கிய
வெப்பத்தில் என் கண்ணீரையும்
சேர்த்து இழுப்பாய்

அப்பாவிடும் வெள்ளை சிகிரெட்டின்
வெண்ணிற புகை சிலசமயம்
என் மூக்கின் துளையில் முத்தமிடும்

உன் மேல் ஒரு ஓரத்தில் நின்று நானும்
புகையின் சுவையை புரிந்து
கொள்ள ஆரம்பித்தேன்

எதிர்வீட்டில் எதோ
ஒரு பெண் அவளை காதலி ஆக்கியது
நீ தான்

மாதந்திர பராமரிப்புக்காக ஒரு நாள் மின்சாரம்
மறியல் செய்யும்

வியர்வை விற்க
காற்று வாங்க உன்னைநோக்கி
மனிதன் ஓடிவந்து உறங்குவான்

மறுநாள் உன்னை மறந்துபோவான்
மனிதன் நன்றி இல்லாதவன்

மழைகாலத்தில்
நீ எனக்கு கிரிக்கெட் மைதானம்

ஆண்டுவிழாவின் போது
நீ எனக்கு ஒத்திகை மேடை

இப்படி எத்தனையோ
எனக்கு கவிதை தந்தாய்
எனக்கு காதலி தந்தாய்
உன்னை எப்படி சொல்ல
என் சென்ரிங் சிநேகிதன் நீ

காங்ரீட் கம்பிகளோடு
உனக்குள் இருக்கும்
ஒரு கனமான இதயம்
இந்த சராசரி மனிதனுக்கு எப்படி புரியும்