Sunday, July 3, 2011

சென்ரிங் சிநேகிதன்

கண்ணாமூச்சி விளையாடும் போதுதான்
உன்னை கண்டுபிடித்தேன்

பலமுறை யோசித்திருக்கிறேன்
மனிதன் மழையின் போது உனக்குமட்டும்
ஏன் குடை பிடிக்க மறந்துபோகிறான்

பழையசோறை வடகமாக்கும்
போதுதான் என் அம்மாவுக்கு
உன் மேல் பாசம் வரும்

விஸ்கியில் விழும் நேரம் மட்டும்
என் அப்பாவுக்கு உன் விலாசம் தெரியும்

எனக்கு நீ எப்படி
கண்டிப்பாக இப்படி அல்ல

உல்லாசபயணம் நிறைய சென்று இருக்கிறேன்
உன் மீது உறங்கும் போதுதான் வானத்தை
சுற்றிஇருக்கிறேன்
நிலவை காதலித்திருக்கிறேன்
நட்சத்திரங்களோடு நட்பாகி இருக்கிறேன்

எதோ பிரச்சனையை சுமந்து உன் மேல் உறங்குவேன்
மதியவெயிலில் நீ வாங்கிய
வெப்பத்தில் என் கண்ணீரையும்
சேர்த்து இழுப்பாய்

அப்பாவிடும் வெள்ளை சிகிரெட்டின்
வெண்ணிற புகை சிலசமயம்
என் மூக்கின் துளையில் முத்தமிடும்

உன் மேல் ஒரு ஓரத்தில் நின்று நானும்
புகையின் சுவையை புரிந்து
கொள்ள ஆரம்பித்தேன்

எதிர்வீட்டில் எதோ
ஒரு பெண் அவளை காதலி ஆக்கியது
நீ தான்

மாதந்திர பராமரிப்புக்காக ஒரு நாள் மின்சாரம்
மறியல் செய்யும்

வியர்வை விற்க
காற்று வாங்க உன்னைநோக்கி
மனிதன் ஓடிவந்து உறங்குவான்

மறுநாள் உன்னை மறந்துபோவான்
மனிதன் நன்றி இல்லாதவன்

மழைகாலத்தில்
நீ எனக்கு கிரிக்கெட் மைதானம்

ஆண்டுவிழாவின் போது
நீ எனக்கு ஒத்திகை மேடை

இப்படி எத்தனையோ
எனக்கு கவிதை தந்தாய்
எனக்கு காதலி தந்தாய்
உன்னை எப்படி சொல்ல
என் சென்ரிங் சிநேகிதன் நீ

காங்ரீட் கம்பிகளோடு
உனக்குள் இருக்கும்
ஒரு கனமான இதயம்
இந்த சராசரி மனிதனுக்கு எப்படி புரியும்

3 comments:

  1. புது பாதையில் சிந்தனையை செலுத்துகிறார் ஒரு புது கண்ணதாசன்

    ReplyDelete
  2. கம்பிகளுக்கு உங்கள் மேல் காதல் வந்து விடப் போகிறது...

    ReplyDelete