Tuesday, May 17, 2011

நகக்கண்


"என்னமோ எதோ முட்டிமுளைக்குது மனதில் " அலறியது செல்போன்.எடுத்தால் எதிர்முனையில் "டேய் சீக்கிரம் கிளம்பி சீதக்காதி தெருவுக்கு வா "ன்னு சொல்லி துண்டித்து கொண்டது .இது வாரம் இருமுறை வரும் வழக்கமான அழைப்பு.நானும் சீக்கிரம் கிளம்பி அந்த தெருவை அடைந்தேன்.
வழக்கம் போல் குமார் அங்கு நின்று கொண்டு இருந்தான்.பிரவுன் T-ஷர்ட் ,ப்ளூ ஜீன்ஸ் சகிதமாக நின்றான். "வாடா தூங்கிட்டியா,களைப்பில் "ம்" ன்ற பதிலோடு நிறுத்திக்கொண்டேன்."டைம் என்னாச்சுடா"இது அவன் என்னிடம் பத்தாவது முறை கேட்பது ,நான்"10.15 டா என்றேன்.இப்படி
கேட்பதற் காகவே அவன் கடிகாரம் அணிவதில்லை.என்னிடம் நீண்டநேரம் பேசினாலும் அவன் உதடு வார்த்தைகளை உச்சரித்தாலும் அவை உயிரில்லாமல் என்னிடம் வந்து விழுந்தது.காரணம் "மைதிலி இன்னும் வரவில்லையே" இந்த வார்த்தை தாண்டிதான் என்னக்கு பதில் வந்தது அவனிடம்.
நேரம் 11.30ஆனது.குமாரின் முகம் ஆரம்பத்தில் எரியும் தெரு விளக்கு போல கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசமானது.காரணம் எதிரே மைதிலி அவள் தோழிகளுடன் கூட்டமாக வந்து கொண்டிருந்தாள்."கூட்டத்திலேயே அவள் தான் சுமார் " இதை குமாரிடம் எப்படி சொல்ல மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்.அவள் குமாரை பார்த்ததும் ரெடிமேடாக ஒரு புன்னகை வைத்திருத்தால் போல சிரித்தாள்.பதிலுக்கு அவனும் அப்படியே."ஏய் உன்னோட ரோமியோ வந்துடாண்டி"னு அவளது தோழிகள் கிண்டலத்துக்கொண்டே விலகி வந்தாள் குமாரிடம்.உடனே குமார் "டேய் மச்சான் நீ வந்து "...........உடனே நான் "போதும்டா நான் அந்த டீ கடைக்கு போகணும் அவ்வுளவுதானே போறேன் போறேன் "னு சொல்ல "நீ தாண்ட என்னோட friend "ன்னான்.வைச்சுகோடா உன்னோட certificate a "ன்னு சொல்லி கொண்டே டீ கடையை அடைத்தேன்.
மைதிலி குமாரின் அருகில் வந்து பேச ஆரம்பித்தாள்.நான் கடையில் "அண்ணே ஒரு டீ ஒரு கிங்க்ஸ்"ன்னு சொன்னதும் டீ வந்தது குடிக்கபோகும் போது அருகில் இருந்த தினசரியை புரட்ட ஆரம்பித்தேன்.சிகிரெட்டை பற்றவைத்து தினசரியை புரட்டினேன்.பக்கத்துக்கு ஏரியாவில் எதோ
விசேசம் போல குப்பைதொட்டியில் இருந்த எச்சிஇலைகளை பார்த்தாலே தெரிந்தது பணக்காரர்களின் விசேசம் என்று.ஒரு நாய் இலைகளை கிளறி தன் பசியை ஆற்றிகொண்டிருந்து அதன் குட்டிகளுடன்.
சிகிரெட்டின் உயிரை நானும் காற்றும் மாறி மாறி குடித்துகொண்டிருந்தோம்.அருகில் மேஜையில் சிதறிபோன சீனிதுண்டுகளை எறும்புகள் அதன் இருப்பிடத்துக்கு இழுத்து சென்று கொண்டுஇருந்தன.தினசரி முடியும் தருவாயில் "என்னாச்சு இவன் இவ்வுளவு நேரம் பேசுறான். "பார்ப்பது கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும் பார்த்தேன்.மைதிலி முடி சற்று நெற்றியில் இருந்ததை குமார் அவன் கையில் கோதி அவள் காதுக்கு பின்னால் சேர்த்தான்.அவளது நோட்டை வாங்கி எதோ பேசுகிறான்.அவளும் சிரிக்கிறாள் .பின் நோட்டை பிடுங்குகிறான்.செல்லமாக அவனை அடிக்கிறாள்.தலையில் கொட்டுகிறாள் .பின் அந்த நோட்டை மார்போடு அணைத்துக்கொண்டு அவனிடம் எதோ பேசுகிறாள்.
இப்படி நீண்டுகொண்டே இருந்தது என்னுடைய காத்திருப்பு.மீண்டும் தினசரியை புரட்டினேன்.கடைசி பக்கத்தில் நாளை 61 வது குடியரசு தினம் கொண்டடாப்படுகிறது ன்னு பார்த்ததும் "போன வாரம் தான நம்மளுக்கு லீவ் விட்டாங்க "ன்னு யோசிச்சு கொண்டே டீக்கடையில் "அண்ணே இந்த வாரம் பேப்பர் வரலியா "ன்னு கேட்டேன்.தம்பி இதையா படிச்சீக இது வட மடிக்க வைச்சுஇருந்த பேப்பர்ல"ன்னு சொல்லி சிரிக்க ஆரம்பிச்சார்.உள்ள இன்னிக்கி பேப்பர் இருக்கு படிங்க ன்னு சொன்னார்.என்னக்கு அதற்குமேல் பேப்பர் படிக்க இஷ்டம் இல்ல.எட்டி பார்த்தேன் அவன் இன்னும் முடிப்பதாக இல்லை.என் வாழ்கையில் என் நண்பன் மேல் என்னக்கு பொறாமை பட வைத்தது அந்த நிமிடம்.என்னுள் அனையபோகும் சிம்னி விளக்கு போல எரியதொடங்கியது அந்த உணர்வு.இரண்டு மூன்று நிமிடம் எதையும் நினைக்கமுடியவில்லை என்னக்கு.இந்த தீ என் நட்பின் பக்கங்களில் பிடித்துவிடாதவாறு அணைக்க தோன்றியது என்னக்கு.

காத்திருப்பது காதலில் சுகம்தான்.ஆனால் காதலிப்பவர்களுக்காக காத்திருப்பதுதான் நககண்ணில் ஊசி ஏறியதுபோல இருந்தது எனக்கு.

4 comments:

  1. Super boss!
    நண்பனின் உணர்ச்சியை அப்படியேய் கொட்டி இருக்கிறீர்கள். ஸ்பெக்ட்ரம் ராசா பணத்தை கொள்ளை அடித்தார் நம்ம ராஜாவோ நல்ல மனதை கொள்ளை அடிக்கிறார் நல்ல கதைகளோடு....

    கற்பனைக்கு பாராட்டுகள்...

    ReplyDelete
  2. அந்த நண்பன் சத்தியமா நான் இல்லிங்கோ

    ReplyDelete
  3. சிகிரெட்டின் உயிரை நானும் காற்றும் மாறி மாறி குடித்துகொண்டிருந்தோம்.
    nice sir....

    ReplyDelete
  4. வித்தியாசமான சிந்தனை நண்பரே... அருமை

    ReplyDelete