Wednesday, March 21, 2012

நூலன்படை

புதிதாக கட்டியிருக்கும்
வீட்டுக்குள்
புகுந்துகொள்ளும் நூலன்படைபோல
சலவை செய்த புத்திக்குள்
சத்தம் போடுது உன் நினைப்பு !

தலையில் சீப்பை
வைத்துகொண்டு தேடுவதைப்போல
தேடிக்கொண்டே இருக்கிறேன்
உன்னை எனக்குள்

உன் அலை அடித்து
அடித்தே
பாசம் பிடித்துப்போனது
இந்த பாராங்கல்லில் !

இரவில் எரிய ஆரம்பித்த கொசுவர்த்தி
தன்னை சுற்றி போடும்
சாம்பல் வளையம் போல
உன்னை சுற்றுது என் நினைப்பு

காலம் உன் அடர்த்தியை
குறைத்தாலும்
வடுக்களை மட்டும் வாரிப்போவதில்லை

1 comment:

  1. காலம் உன் அடர்த்தியை
    குறைத்தாலும்
    - இதன் அர்த்தத்தை நான் எப்படி எடுத்துகொள்வது? கவிஞரே!

    ReplyDelete