Friday, March 30, 2012

கோணிப்பை



பூமி பிளக்கும்
பூகம்ப வெயில்

ஆக்கிரமிப்புகளை அகற்றியதில்
அரை நிர்வாணமாய்
ரோட்டோரகடைகள்

ஓரம்
ரோட்டோரம்
உழைத்து இளைத்துப்போன ஊசிகள்
உருகிய நிலையில்
மெழுகு தோய்த்த நூற்கண்டுகள்
கோணிப்பை
சகிதமாக கூன்விழுந்த கிழவன்

புகையிலை தின்றது போக
மீதமுள்ள பற்கள்
மிச்சமிருக்கும் சிரிப்புடன்
பேரம் பேசுபவர்களிடம்
பெரியவர்
வந்து போன கல்மனதுக்காரர்களால்
நிரம்பி இருந்தது அவரது கல்லா
அரைவயிராய்

அறுந்துபோனது செருப்புகளின் காதுகள்
மட்டுமல்ல
மனிதாபிமானமும் தான்

2 comments:

  1. கவிதை எனக்குப் பிடித்தது தோழர்.. அவ்வப்போது கவிதை எழுதுவதைத் தவிர்த்து தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துகள்..
    "புகையிலை தின்றது போக
    மீதமுள்ள பற்கள்"

    "அறுந்துபோனது செருப்புகளின் காதுகள்
    மட்டுமல்ல
    மனிதாபிமானமும் தான்"

    நல்ல வரிகள்..

    ReplyDelete