Saturday, May 21, 2011

ஈரத்துணி

காற்றுக்கு தெரியாது, பூக்களில் மோதினால் அவை பூமியில் விழும் என்று, அது போல என்னில் விழுந்தது உன் நட்பு. கொடியில் காயபோட்ட ஈரத்துணி நழுவி விழுவது போல என்னுள் நுழைந்தது உன் நட்பு. இது குழந்தைக்கும் அது வைத்து விளையாடும் பொம்மைக்கும் இடையே இருக்கும் உறவு. அது அதை கொஞ்சும், தாலாட்டும், முத்தமிடும், சாதம் ஊட்டும், அதனிடம் அதன் குறைகளை சொல்லும், குலுங்கி சிரிக்கும், கோபம் கொள்ளும், உடையை சரி செய்யும். இந்த உறவை காதல் என்று சொல்வதா? இல்லை நட்பு என்று சொல்வதா?
குழந்தைக்கு பொம்மை கூட இருக்கனும். இதை குழந்தைத்தனம் என்று கூறி ஒதுக்கி விட முடியாது. நமக்குள் எதாவது குழந்தைத்தனம் கடைசி வரை பயணிக்கும், அது வெளிப்பட்டு கொண்டிருக்கும். இந்த கடிதம் கூட அப்படி ஒரு வெளிப்பாடுதான். காரணம் குழந்தைகள் எப்போதும் பொய் சொல்லுவதில்லை.
தூங்குகின்ற குழந்தையிடம் பொம்மை பறிக்கப்பட்டு காலையில் உதடு பிதுக்கி விசிம்பி அலுமே அப்படி இருந்தது “நாளைக்கு எனக்கு கல்யாணம்டா” என்று தோழியாக நீ சொல்லும்போது.



No comments:

Post a Comment