Tuesday, May 31, 2011
இறைவன் என்பது எழுத்துப்பிழை
வழக்கம் போல மக்களை நிரப்பியிருந்தது அந்த பேருந்து நிலையம்.வெள்ளரி,தண்ணி பாக்கெட் இந்த இரு வார்த்தைகளை தன் வறண்ட தொண்டையில் கத்தி வியாபாரம் செய்தார்கள் நடைபாதை வியாபாரிகள்."அய்யா ஒரு பத்து ரூபா கொடுங்க ஊருக்கு போக காசு இல்ல" என மனிதாபிமானத்தை அடகு வைத்து பிச்சை எடுத்தார் அந்த டிப்டாப் ஆசாமி. நான்கு வயது கலைகூத்தாடி சிறுவன் கயிற்றின் மேல் ஏறி கானா பாடினான். அதை சுற்றியிருக்கும் கூட்டம் காசு போடாமல் ரசித்துக்கொண்டு இருந்தது. செல்போனில் எதோ டைப் செய்து கொண்டே யாரையோ எதிர்பார்த்து காத்திருந்தாள் ஒரு கல்லூரி மாணவி."சார் இது மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் அற்புத மூலிகை சார் இதுல ரெண்டு சொட்டு எடுத்து ஒருகிளாஸ் தண்ணியில மிக்ஸ் பண்ணி சாப்டிங்ன சகல வியாதிகளும் குணமாகும்.எங்க மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லேனா உங்க பணம் வாபஸ் சார் "னு ஒரு வியாபாரி சவால் விட்டு விற்பனை செய்துகொண்டு இருந்தான்.அதை ஒரு கூட்டம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. "சில்லறைய கொடுங்க எல்லோரும் பத்து ரூபாவா நீட்டுனா நாங்க அச்சா அடிக்கிறோம்"சலித்துக்கொண்டே டிக்கெட் கொடுத்தார் நடத்துனர்.ஒரு பெண்ணின் மார்புக்கும் மணிபர்சுக்கும் இடையே உள்ள இடைவெளி போல இருந்தது எதிர் சீட்டில் இருந்த அந்த புதுமண தம்பதிகளின் நெருக்கம். உடல் முழுதும் காலத்தின் ரேகை விழுந்த ஒரு மூதாட்டி தலையில் பருத்திமார்,புல்லுகட்டுடன் பஸ்சில் ஏறியது.தன் கண்ணில் மேல் கவ்விஇருந்த கண்ணாடியை தூக்கி "மானாமதுரை போகுமப்பா"ன்னு கேட்டதும் மானாமதுரையா போகாது போகாது சொல்லி கீழே இறங்கு கீழே இறங்கு ன்னு வெப்பம் கக்கினார் நடத்துனர் அந்த கிழவியிடம்.அது புலம்பி கொண்டே சென்றது.இதையெல்லாம் பார்த்த நான் ஒரு காட்சியை கவனிக்க தவறினேன்.அது அந்த பஸ் ஸ்டான்ட் நிழல் குடை பெரியவர்.அவர் அருகில் வயதான நாய்.எப்போதுமே அது அவர் கூடவே இருக்கும்..தன்னிடம் இருந்த ரொட்டி துண்டை போட்டார்.அவருக்கு போக மீதம் தான் அது என்று கண்டிப்பாக சொல்ல முடியாது அவர் கையில் வைத்திருந்ததே மீதம் தான்..இதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.சர்வசாதாரணமாக கடந்து போகும் மனிதர்களில் நானும் இருந்திருக்கிறேன்
உலகத்தின் எல்லா ஜீவராசிக்கும் இறைவன் படியலப்பனாமே ."தனி ஒரு மனிதருக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" னா பாரதி.பாரதி பராசக்தி பக்தன்.புரியவில்லை எனக்கு.அப்படியானால் இறைவன் என்பது எழுத்துப்பிழை ."இரை" வன் என்பதே சரி
Labels:
கதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
wow..touching நண்பா..உணர்வுகளை வருடியது!
ReplyDeleteungal uvamaigal anaithum nandru.. vaalthukkal.. nalla karpanai...
ReplyDeletenanbaa... "uvamaigal unathamanaal un padaipugalum unathamagum"... "Pilagailai thiruthi piraviyil uyarnthu perum kavignaan" ena peru pera en manamarntha valthukkal.
ReplyDeleteமிக சரியான தலைப்பு இந்த இளைய தலைமுறைக்கு. தொடரட்டும் உன் கதை பயணம். இதை விமர்சிக்க எனக்கு போதிய கலைக்கண் இல்லை என்று தான் சொல்லவேண்டும். நீ ஏன் நண்பன் என்பதில் எனகோர் பெருமை.
ReplyDeletenalla title selection
ReplyDeletecute ana., natural feel...
ReplyDeletethanks for your feedback
ReplyDelete