Thursday, June 2, 2011
மேஜை விளக்கு எரிந்து கொண்டிருந்தது
மேஜை விளக்கு எரிந்து கொண்டிருந்தது.சாந்தி எதோ எழுதிக்கொண்டு இருந்தாள்.அது அவளின் வெளிநாடு கணவனுக்காக எழுதுகிறாள்."என்னங்க எப்படி இருக்கீங்க னு கேட்குற அளவுக்கு நமக்குள் இடைவெளி.நல்லா இருக்கீங்களா.நான் நல்லா இல்லீங்க,ரொம்ப கஷ்டமா இருக்கு.நீங்க இல்லாம வீடு முழுதும் ஆள் இருந்தும் வெறுமையா இருக்கு.
எங்க பார்த்தாலும் நீங்கதான் நிரம்பியிருக்கீங்க.உங்க சட்ட வாசனை , சுண்டுவிரல் மச்சம்,உங்க தாடி,எழுதின பேனா , நீங்க வாங்கிகொடுத்த புடவை , நாம சேந்து சமைக்கும் போது என் பெருவிரலில் பட்ட தீக்காயத்தின் தழும்பு.இதையெல்லாம் நான் தொடும்போது நீங்க நான் தனியா இருக்கும் போது அமைதியா பின்னாடிவந்து என் காதருகே காத்து ஊதுவிங்களே அந்த ஸ்பரிசம் நினைவுக்கு வரும்ங்க
பிரிவை விட தனிமை ரொம்ப கொடுமைங்க யார்கூட என்ன பேசினாலும் ,சிரித்தாலும் கடைசிபபுள்ளியாக இருப்பது நீங்க தான்ங்க.சிலபேர் பேசும் போது என் முகம் பார்ப்பதே இல்ல அந்த நிமிஷம் தூசிவிழுந்த கண்ணு மாதிரி ஆயிடும் மனசு.நான் என்னதான் உங்க கூட போன் பேசினாலும்,chat பண்ணினாலும் கடிதம் எழுதும் போதுதான் உங்களை என்னால் காதலிக்கமுடியுது.என் மனதின் கனத்தை பேனா மை வழியே காகிதத்தில் கடிதம் தான் கரைக்கிறது. இப்போதெல்லாம் டிவி ல,சினிமா ல ஹீரோ,ஹீரோயின் கட்டிபிடிக்கும் காட்சியை பார்க்க பிடிக்கவில்லை.
நான் எத்தனையோ முறை உங்களிடம் அழுதிருக்கிறேன்.உங்கள் மார்பில் தலைவைத்து அழும்போது உங்க மார்புச்சூடு என் கண்ணீரை ஆவியாக்கிவிடும்.நீங்க நல்லா இருக்கணும்ங்க ....................................................................................
சாந்தி அறையில் பேன் க்ரீச்,க்ரீச் னு சத்தம் போட்டது.அது நேரம் ஆக ஆக குறைந்து கொண்டே இருந்தது.சாந்தி அழுத களைப்பில் அப்படியே தூங்கிபோனாள்.அவள் கை பேனாவை விடவில்லை.பிறந்த குழந்தை பிடிக்கும் பிடிமானம் போல இருந்தது அது. மேஜை விளக்கு எரிந்து கொண்டிருந்தது.அறையெங்கும் அமைதி அப்பியிருந்தது.மேஜைக்கு கீழே ஒரே காகிதக்குப்பை.சாந்தி இதுவரை எழுதிய மொத்த கடிதத்தின் தொகுப்பு அது.அவள் அறையில் எப்போதும் குப்பைதொட்டி நிறைந்தே இருக்கும்.
Labels:
கதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
திரவியம் தேடப் போன
ReplyDeleteகணவனைப்
பிரிந்த மனைவியின் வெறுமையை
இன்னும் கொஞ்சம் ஆழமா சொல்லிருக்கலாம்
sir...
all t best for ur next story sir..
அருமை தலைவனைக் காணா தலைவி !!
ReplyDeleteகாமம் கலக்காத காதல் கதை இது.
ReplyDeleteஎன்னவென்று சொல்ல, ஒரு சிறு கதை மூலம் என் நண்பன் கொடுத்த காதல் மலர் இது.
Great Raja!!!!! Keep it Uppppppp!!!!!!!!
ReplyDeleteஎன்னங்க எப்படி இருக்கீங்க னு கேட்குற அளவுக்கு நமக்குள் இடைவெளி .. pidichurukku
ReplyDeletepasangaluku class illa , enga raja pandiku tholviye illa, kavithaien varigaluku nandri.....
ReplyDeletenacch....
ReplyDelete